அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள தனியார் பாடசாலைகளின் 2021 ஆம் கல்வியாண்டின் 3ஆம் தவணை இன்றுடன் (06) நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் கபில சீ.கே. பெரேரா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, 2021 கல்வி ஆண்டிற்கான 3ஆம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08) நிறைவு செய்யப்படவிருந்த நிலையில் தற்போது அதனை இன்றுடன் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் இன்றுடன் விடுமுறை வழங்கப்படுவதாக, ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, 2022 கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை ஏப்ரல் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி முதல் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமையும் விசேட அம்சமாகும்.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகள் புனித ரமழான் நோன்பு காரணமாக ஏற்கனவே விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Add new comment