எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி முதல் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, அடுத்த தவணையான முதலாம் தவணை ஏப்ரல் 18ஆம் திகதி ஆரம்பமாவதுடன் இவ்வருடம் பாடசாலை நேரத்தை ஒரு மணி நேரத்தால் நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் கபில சீ.கே. பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்களை பூர்த்தி செய்ய 139 நாட்களே கால அவகாசமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், நேரத்தை ஒரு மணி நேரம் நீடிப்பதன் மூலம் கற்பித்தல் காலத்தை கூடுதலாக வழங்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2022 கல்வியாண்டுகான பாடசாலை நாட்களை அனுமதிக்கப்பட்ட 210 நாட்களாக பூர்த்தி செய்ய முடியாதுள்ளதால், தற்போது காணப்படும் 139 நாட்களில், அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளையும் தினமும் மேலதிகமாக ஒரு மணி நேரம் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென குறித்த சுற்றுநிருபத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அது தவிர அரசாங்க விடுமுறைகள், ஞாயிற்றுக்கிழமைகளில், தவணை விடுமுறை காலப்பகுதியில் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் எனவும், எவ்வாறாயினும் விசேட நிலைமைகள் காரணமாக பாடசாலை இடம்பெறவேண்டிய நாளில் பாடசாலையை மூட நேரிட்டால் அதற்கு மாற்றீடான நாளில் பாடசாலை நடாத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வாறு கால அவகாசம் நீடிகப்பட்ட பின்னரும் பாடத்திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாத பட்சத்தில் மூன்றாம் தவணையில் சனிக்கிழமைகளிலும் பாடசாலைகளை நடாத்துவது குறித்தும் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும், அந்தந்த மாகாண கல்வி அமைச்சுகளுக்கு தமது மாகாணங்களின் நிலைமைகளுக்கு ஏற்ப பாடசாலை நாட்காட்டியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டுமாயின் உரிய நிபந்தனைகளின் கீழ் அதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான பாடசாலை நாட்கள்
தமிழ், சிங்கள் புதுவருட விடுமுறை
ஏப்ரல் 08, 2022 - ஏப்ரல் 17, 2022
1ஆம் தவணை - 1ஆம் கட்டம்
ஏப்ரல் 18, 2022 - ஏப்ரல் 20, 2022
2021 க.பொ.த. சா/த பரீட்சை விடுமுறை
மே 21, 2022 - ஜூன் 05, 2022
1ஆம் தவணை - 2ஆம் கட்டம்
ஜூன் 06, 2022 - ஜூலை 08, 2022
2ஆம் தவணை
ஜூலை 18, 2022 - செப்டெம்பர் 16, 2022
3ஆம் தவணை - 1ஆம் கட்டம்
செப்டெம்பர் 19, 2022 - ஒக்டோபர் 13, 2022
2022 க.பொ.த. உ/த பரீட்சை விடுமுறை
ஒக்டோபர் 14, 2022 - நவம்பர் 13, 2022
3ஆம் தவணை - 2ஆம் கட்டம்
நவம்பர் 14, 2022 - டிசம்பர் 23, 2022
முஸ்லிம் பாடசாலைகள்
1ஆம் தவணை - 1ஆம் கட்டம்
மே 04, 2022 - மே 20, 2022
2021 க.பொ.த. சா/த பரீட்சை விடுமுறை
மே 21, 2022 - ஜூன் 05, 2022
1ஆம் தவணை - 1ஆம் கட்டம்
ஜூன் 06, 2022 - ஜூலை 07, 2022
2ஆம் தவணை
ஜூலை 07, 2022 - செப்டெம்பர் 16, 2022
3ஆம் தவணை - 1ஆம் கட்டம்
செப்டெம்பர் 19, 2022 - ஒக்டோபர் 13, 2022
விடுமுறை
ஒக்டோபர் 14, 2022 - ஒக்டோபர் 26, 2022
3ஆம் தவணை - 2ஆம் கட்டம்
ஒக்டோபர் 27, 2022 - டிசம்பர் 23, 2022
Add new comment