முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன காலமானார்

முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன காலமானார்.

1931ஆம் ஆண்டு செப்டெம்பர் 19ஆம் திகதி பிறந்த அவர் இறக்கும் போது வயது 91 ஆகும்.

அதாவுத செனவிரத்ன தொழில் ரீதியாக ஆசிரியராவார்.

முதன் முறையாக 1970ஆம் ஆண்டு லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதனைத் தொடர்ந்து 1989 முதல் 2015 வரை தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இறுதியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சி சார்பில் எம்.பியாக பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 1957 - ஓதர கம் தொலஹ பட்டு கிராம சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1960 - பொதுத் தேர்தலில் தெடிகம தேர்தல் தொகுதியில் போட்டியிட்டார்
  • 1965 - பொதுத் தேர்தலில் ருவன்வெல்ல தேர்தல் தொகுதியில் போட்டியிட்டார்.
  • 1970 - 1977: லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் கேகாலை மாவட்ட (ருவன்வெல்ல) பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1988 - மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு சப்ரகமுவ மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரானார்.
  • 1989 - 2015: கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ச்சியாக இருந்து வந்தார்.

Add new comment

Or log in with...