Gas விலையை அதிகரிக்க அரசிடம் கோரிக்கை

லிற்றோ நிறுவனம் வேண்டுகோள்

 

சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவில்,  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையை அதிகரிப்பது குறித்து அமைச்சரவை இதுவரை அனுமதி வழங்கவில்லை.

சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பது தொடர்பில், நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு தற்போது அதிகாரம் கிடையாதென கூறிய அவர், விலையை அதிகரிப்பதற்கான அனுமதியை அமைச்சரவையே வழங்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...