இவ்வாண்டு 30,000 வீடுகளை நிர்மாணிப்பதே எமது இலக்கு

இந்த ஆண்டு 30,000 வீடுகளை நிர்மாணிப்பதே எங்களின் இலக்கு என்று வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அநுருத்த தெரிவித்தார்.

“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டம் 2022 ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஆரம்ப விழாவின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார். இந்த வைபவம் தங்காலை மாநகர சபை மண்டபத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் நடைபெற்றது.

இங்கு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த மேலும் தெரிவிக்கையில், “வீடமைப்பு இராஜாங்க அமைச்சினால் இதுவரை ஆரம்பிக்கப்பட்ட அனைத்து வீடமைப்புத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் போது நான் அதில் எந்தவித அரசியல் ஆதாயமும் அடையவில்லை. வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் என்ற முறையில் இந்தத் திட்டங்களை செயற்படுத்துவதில் முழு ஆலோசனை, அனுசரணை, வழிகாட்டல் என்பன பிரதமரால் வழங்கப்பட்டது. அவர் இந்த வேலைத்திட்டத்தை நிலப்பரப்பில் சரியான முறையில் நடைமுறைப்படுத்த எமக்கு உதவியதால் இன்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள பயனாளிகள் மாத்திரமன்றி> இந்நாட்டிலுள்ள 24,000 மேற்பட்ட குடும்பங்களும் நன்மை அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 30,000 க்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணிக்க இலக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக வேண்டி அடிக்கல் நாட்டுவதும், வீடுகள் கட்டப்பட்டாலும் நீர், மின்சாரம், வீதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. கடன் உதவி பெற்று நிர்மாணித்த வீட்டிற்கு வீட்டு உரிமைப் பத்திரம் கூட இல்லாதவர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள். இதற்கு காரணம் யார்? இதற்கான காரணத்திற்கு உரியவர்கள் தற்போதைய எதிர்க்கட்சிக்காரர்களே. அவர்கள் குற்றங்களைச் செய்து விட்டு மக்கள் முன் புனிதர்களாக இருக்கின்றனர். இதைப் பற்றி நாங்கள் பேசாமல் இருந்தால் அவர்கள் சரியானவர்கள் என்று மக்கள் தீர்மானிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது எதிர்க் கட்சித் தலைவர் சபையை விட்டு போனது அன்று ஹம்பாந்தோட்டையை விட்டு போனது போல. கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் 3 நாட்களுக்கு பாராளுமன்றத்தைப் பறக்கணித்தார். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் வரவு செலவுத் திட்டத்தைப் புறக்கணிப்பது வரலாற்றில் இதுவே முதற் தடவையாக இருக்க வேண்டும். சரியான கேள்வியை அறிந்து அதற்கேற்ற பதிலை கொடுக்கும் அரசியல் பிரமுகர்கள் இந்நாட்டில் இருப்பது மிகக் குறைவு. அந்த அரசியல் பிரமுகர்களிடம் இருந்து நாம் எதனையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து மட்டுமே.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஆசியாவின் கேந்திர நிலையமாக அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான  மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள். 2015 - 2019 காலப் பகுதிகளில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு அப்போதைய அரசாங்கம் தீர்மானித்த போது அதைப் பற்றி தற்போதைய எதிரக்கட்சித் தலைவர் எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அவர் அவ்வாறு பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தை பேசியதாக ஹன்சார்ட்டில் கூறப்பட்டிருந்தால் நான் எனது இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து கேட்டு விலகிக் கொள்வேன். அது மட்டுமல்லாது என்னுடைய அரசியல் பயணத்தில் இருந்து முற்று முழுதாக நான் விலகிக் கொள்வேன் என்பதையும் அறியத் தருகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் இதைப் பற்றி அப்போது எதனையும் பேசவுமில்லை, குறிப்பிடவுமில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் தற்போதைய பிரதமர் உட்பட ராஜபக்ஷக்களால் மட்டுமே மக்களுக்கு நீதியை நிலைநாட்ட முடியும் என்பதை நாம் இந்த நாட்டு மக்களுக்கு பொறுப்புடன் கூறுகிறோம். அதே போன்று மக்களின் கோரிக்கைகளுக்கு இணங்குபவர்கள் இந்த ராஜபக்ஷக்களே என்பதையும் நான் பொறுப்புடன் கூறிக் கொள்கிறேன். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை விட்டுச் சென்ற எவரும் நன்றாக இருந்ததில்லை. அவரை விட்டுச் சென்ற முன்னாள் செயலாளர் நாட்டின் ஜனாதிபதியானார். ஆனால் இன்று அவருக்கு முகவரி இல்லை. அந்த முகவரி இல்லாதவர்கள்தான் வேலை செய்ய முடியாத கும்பலுடன் போய் அமர்ந்து கொண்டனர்” என்றும் அவர் கூறினார்.

இத்திட்டத்தில் “உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்” வீடமைப்பு வேலைத் திட்டத்தின் கீழ் 588 பயனாளிகளுக்கு 388.200 மில்லியன் ரூபா வீடமைப்பு உதவி காசோலைகள் வழங்கல், செவன வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் 24 பயனாளிகளுக்கு 12.615 மில்லியன் ரூபா காசோலைகள் வழங்கல், மிஹிந்து நிவஹன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளுக்கு 7.100 மில்லியன் ரூபா வீடமைப்பு உதவி காசோலைகள் வழங்கல் என்பன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டது.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ. சானக, தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலியம் விஜேசிங்க கமகே, ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன, ஹம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர் எச்.பீ. சுமனசேகர, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா, அதன் பொது முகாமையாளர் கே.ஏ. ஜானக மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...