குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ. 17 இலிருந்து 20 ஆக 3 ரூபாவால் அதிகரிப்பு

குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை மூன்று ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி, குறைந்தபட்ச கட்டணம் 20 ரூபாவா அதிகரிக்கப்படும். ஏனைய கட்டணங்கள் 15சதவீதத்தினால் அதிகரிக்கப்படும் என்று அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பஸ்கட்டண உயர்வு தொடர்பாக அமைச்சருக்கும் பஸ்சங்கங்களுக்கும் இடையில் ஞாயிறன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சரவைக்கு அறிவித்ததன் பின்னர் பஸ் கட்டணங்கள் திருத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் நேற்று அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

பஸ் கட்டண திருத்தம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (15) அல்லது நாளை வெளியிடப்படும் எனவும், கட்டண அதிகரிப்பு தொடர்பான உரிய அறிவிப்புகள் போக்குவரத்து ஆணைக்குழு ஊடாக வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பஸ் கட்டண அதிகரிப்புடன் புகையிரத கட்டணத்தை அதிகரிக்குமாறு ரயில்வே திணைக்களம் கோரியுள்ளது.   இலங்கை போக்குவரத்து சபையும் பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பேச்சாளர் தெரிவித்தார். 

இதே வேளை கட்டண அதிகரி்ப்பு போதுமானதல்ல என சில பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன. (பா)


Add new comment

Or log in with...