சீ.பி., திலும், விமலவீரவின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம்

சீ.பி., திலும், விமலவீரவின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம்-CB-Dilum-Wimalaweera Sworn in

- இராஜினாமா செய்த அருந்திக மீண்டும் பதவிப்பிரமாணம்

இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சர் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தனது பதவியை இராஜினாமா செய்த அருந்திக பெனாண்டோ மீண்டும் தனது இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

  • சீ.பி.  ரத்நாயக்க - வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் (முன்னர் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு)
  • திலும் அமுனுகம - போக்குவரத்து அமைச்சர் (முன்னர் போக்குவரத்து இராஜாங்கம்)
  • விமலவீர திஸாநாயக்க - அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் (முன்னர் வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும் வனவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்)
  • அருந்திக பெனாண்டோ - தென்னை, கித்துல் மற்றும் பனை செய்கைகள் ஊக்குவிப்பு மற்றும் அதனுடன் இணைந்த கைத்தொழில் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர்

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் கலந்துகொண்டிருந்தார்.

இராஜினாமா செய்யப் போவதில்லை; ஆயினும் அமைச்சராக செயற்படுவதில்லை

இராஜினாமா செய்யப் போவதில்லை; ஆயினும் அமைச்சராக செயற்படுவதில்லை

இராஜினாமா செய்யப் போவதில்லை; ஆயினும் அமைச்சராக செயற்படுவதில்லை

இராஜினாமா செய்யப் போவதில்லை; ஆயினும் அமைச்சராக செயற்படுவதில்லை


Add new comment

Or log in with...