அமைச்சுப் பதவியிலிருந்து விமல் வீரவன்ச, உதய கம்மன்பில நீக்கம்

அமைச்சுப் பதவிகளிலிருந்து விமல் வீரவன்ச, உதய கம்மன்பில நீக்கம்-Cabinet Reshuffle-Wimal Weerawansa and Udaya Gammanpila Removed from their Ministerial Portfolios

- விமலின் அமைச்சு எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு
- கம்மன்பிலவின் அமைச்சு காமினி லொக்குகேவுக்கு
- ஒரு சில அமைச்சுகளில் அதிரடி மாற்றம்

ஜனாதிபதியினால் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர்  பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில அமைச்சுகளில் மாற்றம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47 (II) (ஆ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கு அமைய குறித்த இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, ஒரு சில அமைச்சுக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, உதய கம்மன்பில வகித்த அமைச்சு, காமினி லொக்குகேவிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், விமல் வீரவன்சவின் அமைச்சு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • காமினி லொகுகே - எரிசக்தி அமைச்சர் (முன்னர் மின்சக்தி)
  • பவித்ரா வன்னியாராச்சி - மின்சக்தி அமைச்சர் (முன்னர் போக்குவரத்து)
  • எஸ்.பி. திஸாநாயக்க - கைத்தொழில் அமைச்சர் (முன்னர் அமைச்சு பதவி இல்லை)

குறித்த மூவரும் இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதன்போது, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தும் கலந்துகொண்டார்.

அமைச்சுப் பதவிகளிலிருந்து விமல் வீரவன்ச, உதய கம்மன்பில நீக்கம்-Cabinet Reshuffle-Wimal Weerawansa and Udaya Gammanpila Removed from their Ministerial Portfolios

அமைச்சுப் பதவிகளிலிருந்து விமல் வீரவன்ச, உதய கம்மன்பில நீக்கம்-Cabinet Reshuffle-Wimal Weerawansa and Udaya Gammanpila Removed from their Ministerial Portfolios

அமைச்சுப் பதவிகளிலிருந்து விமல் வீரவன்ச, உதய கம்மன்பில நீக்கம்-Cabinet Reshuffle-Wimal Weerawansa and Udaya Gammanpila Removed from their Ministerial Portfolios

Add new comment

Or log in with...