கொழும்பு - நீர்கொழும்பு வீதியை மறித்து மீனவர்கள் போராட்டம்

கொழும்பு - நீர்கொழும்பு வீதியை மறித்து மீனவர்கள் போராட்டம்-Colombo-Negombo Road Closed Due to a Protest by Fishermen

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் தெல்வத்த சந்தியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மீனவர்கள் குழுவொன்று வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் காரணமாக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட நஷ்டஈட்டின் மீதி கிடைக்காமை, பேலியகொடை முதல் நீர்கொழும்பு வரையான கரையோரத்தில் உள்ள காணிகளை சுவீகரிப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யாமை, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மீன்பிடி உபகரணங்களின் விலை அதிகரிப்பு  போன்ற பிரச்சினைகளை முன்வைத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...