நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றுமொரு வழக்கிலிருந்தும் விடுவிப்பு

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றுமொரு வழக்கிலிருந்தும் விடுவிப்பு-Basil Rajapaksa Acquitted from a Case Filed with Kaduwela Magistrate's Court

அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு சமுர்த்தி நிதி தொடர்பில் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கு இன்றையதினம் (28) எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் குறித்த உத்தரவை விடுத்துள்ளது.

வழக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பதில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளதால் அவரை இவ்வாறு விடுவிப்பதாக கடுவெல நீதவான் மஞ்சுள ரத்நாயக்க அறிவித்தார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக 2015ஆம் ஆண்டு சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பணிக்கொடை (Bonus) பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் குறித்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.


Add new comment

Or log in with...