பஸ் - லொறி விபத்து; 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பஸ் - லொறி விபத்து; 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி-Colombo-Trincomalee Bus Acvident

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு பஸ்ஸொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 8 பேர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் - லொறி விபத்து; 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி-Colombo-Trincomalee Bus Acvident

இவ்விபத்து இன்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து வந்து கொண்டிருந்த சொகுசு பஸ் கலேவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும் இதில் காயமடைந்த 8 பேர் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான விசாரணைகளை கலேவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...