சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு மீண்டும் ஸ்தாபிப்பு

சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு மீண்டும் ஸ்தாபிப்பு-State Ministry of Prison Management Restablished-President Gotabaya Rajapaksa Extraordinary Gazette

- ஒரு சில அமைச்சுகளின் பொறுப்புகளிலும் மாற்றம்

சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சுக்கள் சிலவற்றின் செயற்பாடுகளில் மாற்றங்களை மேற்கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து குறித்த அமைச்சு தனியாக இல்லாமல் ஆக்கப்பட்டிருந்த நிலையில் அது மீள ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த, வர்த்தமானி அறிவித்தலின் படி, பல அமைச்சுக்களின் பொறுப்புகளும் கடமைகளும் திருத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, ஜனாதிபதி செயலகத்தின் கீழ் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சின் செயல்பாடுகளிலும் திருத்தங்கள் மேற்காள்ளப்பட்டுள்ளன.

State Ministry of Prison Management Restablished-President Gotabaya Rajapaksa Extraordinary Gazette

PDF File: 

Add new comment

Or log in with...