Monday, February 21, 2022 - 2:46pm
திட்டமிட்ட மின்வெட்டு நேரத்தை, பிற்பகல் 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலான காலப்பகுதியில் 2 மணித்தியால சுழற்சி முறையில் அமுல்படுத்துமாறு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.
தற்போது இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Add new comment