விமானிகள் சட்டப்படி வேலைப் ​போராட்டம்

The Ariline Pilots' Guild of Sri Lanka-Fly the Roster-Work to Rule

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை மாத்திரம் (Fly the Roster) முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

அங்கீகாரம் பெற்ற வருடாந்த விடுமுறை மற்றும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விடுமுறை நாட்களில் கடமைக்கு செல்லாதிருக்க தீர்மானித்துள்ளதாக  ஸ்ரீ லங்கன் விமான சேவையின் விமானிகளின் மன்றம் (Airline Pilot’s Guild of Sri Lanka - ALPGSL) தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18ஆம் திகதியிலிருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவை நிர்வாகத்தினூடாக எடுக்கப்பட்ட சட்டபூர்வமற்ற சம்பள கொடுப்பனவில் மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவு சீர்கேடுகளுக்கு நீதியான தீர்வை பெற்றுக்கொடுக்காமையினால் விமானிகள் கடந்த பெப்ரவரி 04ஆம் திகதி முதல் இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

அவர்களின் கோரிக்கைகளுக்கு நீதியான தீர்வு பெற்றுக்கொடுப்பதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிர்வாகம் எழுத்து மூலமாக ஒப்புக்கொண்டிருந்தாலும் இதுவரையில் எந்த தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கன் விமான சேவை விமானிகள் மன்றம் தெரிவித்துள்ளது.

The Ariline Pilots' Guild of Sri Lanka-Fly the Roster-Work to Rule


Add new comment

Or log in with...