2021 A/L பரீட்சைகள் நாளை ஆரம்பம்; கொவிட் தொற்றாளர்களுக்கு விசேட ஒழுங்கு

2021 A/L பரீட்சைகள் நாளை ஆரம்பம்; கொவிட் தொற்றாளர்களுக்கு விசேட ஒழுங்கு-2021 GCE AL Exam-Feb 07-March 07

2021 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் (2022) நாளை ஆரம்பமாகின்றது.

இது தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இதனைத் தெரிவித்தார்.

நாளை பெப்ரவரி 07ஆம் திகதி முதல், மார்ச் 05ஆம் திகதி இப்பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

இப்பரீட்சைகள் 2,437 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளன.

பரீட்சைகளில், 345,242 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதோடு, அவர்களில், 279,141 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளும், 66,101 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பரீட்சைக்கு விண்ணப்பித்து, கொவிட் தொற்றுக்குள்ளான மற்றும் தனிமைப்படுத்தலில் உள்ள பரீட்சார்த்திகளுக்காக, விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் வருமாறு...


Add new comment

Or log in with...