பெப்ரவரி 07 - மார்ச் 07 வரை அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

பெப்ரவரி 07 - மார்ச் 07 வரை அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை-All Island Schools Closed for AL Exam-From February 07-March 07

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறுவதன் காரணமாக இவ்வாறு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் பெப்ரவரி 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் 07ஆம் திகதி பாடசாலைகள் யாவும் மீள ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...