2021 A/L (2022) அனுமதி அட்டை கிடைக்காதோருக்கு அறிவிப்பு

2021 A/L (2022) அனுமதி அட்டை கிடைக்காதோருக்கு அறிவிப்பு-Downloding GCE AL Examination Admission Card

2021 க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு (2022) தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் இதுவரை தங்களது அனுமதி அட்டைகளை பெறாமலிருப்பின் அதனை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.doenets.lk) தரவிறக்கம் செய்து கொள்ளலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது.

onlineexams.gov.lk/eic எனும் பகுதியில், உரிய தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்கி, குறித்த அனுமதி அட்டையின் பிரதியை பெறலாமென திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், குறித்த அனுமதி அட்டையில் பெயர், பாடம், மொழி உள்ளிட்ட விடயங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் அதனையும் மேற்கொள்ளலாமென திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2021 க.பொ.த. உயர்தர பரீட்சைகள், 2022 பெப்ரவரி 07 - மார்ச் 05 வரை நாடளாவிய ரீதியில் 2,439 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளதுடன், அவ்வாறு கிடைக்காதவர்கள் மேற்படி முறை மூலம் அதனை தரவிறக்கிக் கொள்ள முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன அறிவித்துள்ளார்.

2021 A/L (2022) அனுமதி அட்டை கிடைக்காதோருக்கு அறிவிப்பு-Downloding GCE AL Examination Admission Card


Add new comment

Or log in with...