இராகலை தீ விபத்து சம்பவம்; வழக்கு விசாரணை நுவரெலியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம்

குறித்த தீ விபத்து சம்பவம் இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை தோட்டம் இலக்கம் ஒன்று மத்திய பிரிவு தோட்டத்தில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதியன்று  இரவு 10.15 மணியளவில் இடம்பெற்றது.

இந்த சம்பவத்தில் உயிர் தப்பியிருந்த தங்கையா இரவீந்திரன் (27) என்பவர் சந்தேக நபராக இராகலை பொலிஸாரால் கைது செய்திருந்த நிலையில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டு முதல் வழக்கு விசாரணை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு  ஒக்டோபர் 12 ஆம்  திகதி  இடம்பெற்றது.

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பான ஒன்பதாவது வழக்கு விசாரணை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில்  இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் இவ் வழக்கு விசாரணையின் ஒன்பதாவது விசாரணையை எடுத்துக்கொண்ட வலப்பனை நீதவான் நீதிமன்ற நீதிபதி டி.ஆர்.எஸ்.ஜினதாச சந்தேக நபரை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தாத நிலையில் வழக்கு மூன்று மாதங்களை கடந்துள்ள நிலையில் இவ்வழக்கின் விசாரணையை நுவரெலியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதாகவும், சந்தேக நபர் நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் பிணை மனு சமர்பிக்க முடியுமெனவும் நீதிமன்றில் தெரிவித்தார்.

அதேநேரத்தில் மேற்படி தீ விபத்து சம்பவத்தில் உயிர்தப்பியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான தங்கையா இரவீந்திரன் கடந்த 114 நாட்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சந்தேக நபரை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மன்றில் ஆஜர்ப்படுத்தப்படாத நிலையில் "ஸ்கைப்" தொழிநுட்பம் மூலம் சந்தேக நபருடன் விசாரணையை நீதிபதி  மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மீண்டும்  இவ்வழக்கு விசாரணை இன்று (24)   விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபரை மன்றில் ஆஜர்படுத்தாத நிலையில் சந்தேக நபருடன் மீண்டும் "ஸ்கைப் "தொழிநுட்பட்பம் ஊடாக விசாரணையை முன்னெடுத்த நீதிவான் வழக்கை நுவரெலியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக தெரிவித்து எதிர்வரும் 07ஆம் திகதிவரை வழக்கை ஒத்தி வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

இதனடிப்படையில் மேற்படி சம்பவம் தொடர்பான  குறித்த வழக்கு விசாரணையின் எட்டு விசாரணைகள் "ஸ்கைப்"தொழிநுட்பம் ஊடாகவே நீதிபதி முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சந்தேக நபரை பதுளையிலிருந்து அழைத்து வர முடியாத நிலையினை சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்ச்சியாக நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

மேலும் சந்தேக நபர் சார்பில் நீதிமன்றில் சட்டத்தரணிகள்,மற்றும் உறவினர்கள் எவரும் ஆஜராகாத நிலையில் "ஸ்கைப்" தொழில்நுட்பம் ஊடாகவே வழக்கு விசாரணை செய்யப்பட்டது.

குறித்த தீ  விபத்து சம்பவத்தில் பெற்றோல் பாவிக்கப்பட்டுள்ளதாக
அரசாங்க இரசாயன பகுப்பாய்வு முறை மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டு அதன் அறிக்கை இராகலை பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  குறித்த சம்பவம் தொடர்பில் வலப்பனை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் ஒன்பதாவது வழக்கே இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் மேலதிக விசாரணைகளை இராகலை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கும்படி நீதிமன்றில் ஆஜராகியிருந்த இராகலை பொலிசாருக்கு  நீதிபதி உத்தரவு பிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

(ஆ.ரமேஸ்)


Add new comment

Or log in with...