மின்சார சபைக்கு நாளாந்தம் 1,500 மெட்ரிக் தொன் டீசல் வழங்க தீர்மானம்

- 3 நாட்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியமில்லை: இ.மி.ச. 

மின் உற்பத்திக்காக நாளாந்தம் 1,500 மெட்ரிக் தொன் டீசலை இலங்கை மின்சாரசபைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்துக்கு தேவையான டீசல் இல்லாமை காரணமாக நேற்று முன்தினம் கொழும்பு, கம்பஹா உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் சுமார் இரண்டரை மணி நேரம் மின் துண்டிப்பு ஏற்பட்டது.

அதனால் அவசர தேவை கருதி நேற்று முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை நாளாந்தம் 1,500 மெட்ரிக் தொன் டீசலை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் 3,000 மெட்ரிக் தொன் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் 3 நாட்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியமில்லை, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 

எரிபொருள் பெற்றுக்கொண்டமைக்காக இலங்கை மின்சாரசபை 91 பில்லியன் ரூபா பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு ஏற்கனவே வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...