இந்திய இசையின் அடையாளம் லதா மங்கேஷ்கருக்கு கொரோனா

உலகப் புகழ் பெற்ற முதுபெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் அவர் நேற்று அனுமதிக்கப்பட்டார். 92 வயதான லதா மங்கேஷ்கர், தற்போது மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.

கலைத்துறையில் பிரபலங்களையும் கொரோனா தொற்று விட்டு வைக்கவில்லை. ​ெஹாலிவுட், பாலிவுட்,கொலிவுட் என அனைத்து சினிமா வட்டாரங்களிலும் பிரபல நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் மகேஷ்பாபு, திரிஷா, குஷ்பூ என பிரபலங்கள் பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ளனர்.

​ இந்நிலையில் அதிர்ச்சியூட்டும் விஷயமாக பிரபல பின்னணிப் பாடகி, 'இந்திய பாடல்களின் இமயம்' என அழைக்கப்படும் முதுபெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வருகிறார். லதா மங்கேஷ்கருக்கு வேறு உடல்நலப் பிரச்சினைகள் உள்ளன. மேலும் வயது காரணியைப் பார்த்து, மருத்துவர்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என்று மருத்துவமனை வட்டாரத் தகவல் வெளியாகியுள்ளது.

முதல் அலையின் போது 2019 நவம்பரில் மூச்சுத்திணறல் காரணமாக மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது,​​மங்கேஷ்கரின் தங்கையான உஷா, மங்கேஸ்கருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், மங்கேஷ்கர் தனது 92வது பிறந்தநாளை தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடினார். அவரது பிறந்தநாள் அவரது ரசிகர்களால் பெரிதாக சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டது.​​​​சமூக ஊடகங்களில் அனைத்து தரப்பிலிருந்தும் இசை அடையாளமான லதா மங்கேஷ்கருக்கு ரசிகர்களின் அன்பின் வெளிப்பாடு மற்றும் வாழ்த்துக்களும் குவிந்தன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், மங்கேஷ்கரின் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்திப்பதாக தெரிவித்திருந்தார். அவரது பிறந்த நாளை நாடே கொண்டாடியது. "மதிப்புள்ள லதா தீதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவளுடைய இனிமையான குரல் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இந்திய கலாசாரத்தின் மீதான அவரது பணிவு மற்றும் ஆர்வத்திற்காக அவர் மதிக்கப்படுகிறார். தனிப்பட்ட முறையில், அவருடைய ஆசீர்வாதங்கள் பெரும் பலத்திற்கு ஆதாரமாக இருக்கின்றன. லதா தீதியின் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நான் பிரார்த்திக்கிறேன் "என்று பிரதமர் மோடி அப்போது தெரிவித்திருந்தார். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக மங்கேஷ்கர் 1,000 க்கும் மேற்பட்ட ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் பல்வேறு பிராந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இந்தியா முழுவதும் அல்லாமல் உலகெங்கும் பல்வேறு மொழி பேசும் கோடிக்கணக்கான மக்கள் அவரது ரசிகர்களாக உள்ளனர். இந்திய பிரதமர் முதல் பல்வேறு பிரபலங்கள், வி.வி.ஐ.பிக்கள், வி.ஐ.பிக்கள் அவரது தீவிர ரசிகர்கள் ஆவர். 92 வயதாகும் லதா மங்கேஷ்கரின் கடைசிப் பாடல் "சௌகந்த் முஜே இஸ் மிட்டி கி", இது மார்ச் 30, 2021 அன்று இந்திய இராணுவத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெளியிடப்பட்டது. இந்தியா முழுவதும் தனது கானக்குரலால் மக்களை கட்டிப்போட்டுள்ள லதா மங்கேஷ்கருக்கு 2001 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த குடிமகன் விருதான 'பாரத ரத்னா' வழங்கப்பட்டது.


Add new comment

Or log in with...