திருகோணமலை மாவட்ட தேர்தல் தொகுதிகளுக்கு அமைப்பாளர்கள் நியமனம்

திருகோணமலை மாவட்ட தேர்தல் தொகுதிகளுக்கு அமைப்பாளர்கள் நியமனம்-SLFP Trincomalee Districst Organisers Appointed

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களை நியமித்துள்ளது.

இதன்படி, மூதூர் தொகுதியின் அமைப்பாளராக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை தொகுதிக்கான அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜயசேகரகரவும் சேருவில தொகுதிக்கான அமைப்பாளராக மகேஷ் சத்துரங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.கே.ஏ.டிஸ். குணவர்தனவின் புதல்வர் நளின் குணவர்தன நியமிக்கப்பட்டார்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிரிசேன நேற்று (08) கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டின்போது வழங்கி வைத்தார்.

(கிண்ணியா மத்திய நிருபர் - கியாஸ்)


Add new comment

Or log in with...