Tuesday, December 14, 2021 - 8:14am
ஆசியாவின் ராணி(queen of Asia) எனப்பெயரிடப்பட்டு உலகின் அதிக விலையுயர்ந்த இரத்தினக்கல் என அனுமானிக்கப்பட்டுள்ளகுறித்த இரத்தினக்கல்லைக் கொள்வனவு செய்யவருமாறு இதன் உரிமையாளர்கள் ஐவரும் சர்வதேச இரத்தினக்கல் வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதன்படி குறித்த இரத்தினக்கல்லானது
310 கிலோ அல்லது 15 இலட்சத்து 50 ஆயிரம் கெரட் நிறையுடையதாகும்.
மேலும் இரத்தினபுரி மாவட்டத்தில் அண்மித்த காலங்களில் உலகின் மிக விலை உயர்ந்த இரத்தினக்கற்கள் பல கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதன் இன்னொரு படியாக உலகின் மிக விலை உயர்ந்த blue sapphire வகையைச் சேர்ந்த இரத்தினக்கல் தொகுதியை இரத்தினபுரி பட்டுகெதர பகுதியில் கண்டெடுத்துள்ளதாக இரத்தினக்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி சுழற்சி நிருபர்