Sunday, December 12, 2021 - 12:34pm
'ஆசியாவின் ராணி' என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய இயற்கை மாணிக்கக் கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹொரணை, தல்கஹவில பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்ந இரத்தினக்கல்லின் எடை சுமார் 310 கிலோகிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாணிக்கக்கல் ஒரு மாதத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டதாக, தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மதிப்பீடுகளின் பின்னர் இதனை ஏலத்திற்கு விடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.