இன்று நாட்டின் 10 மாவட்டங்களில் 58 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 10 மாவட்டங்களில் 58 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-58 Vaccination Centers Operating in 10-Districts-December 12

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (12) நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 58 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

அத்துடன், பூஸ்டர் டோஸினை பெறத் தகுதியுடையவர்களான, இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்று 03 மாதங்கள் நிறைவடைந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், எந்தவொரு தடுப்பூசி மையத்திலும் நேற்று (11) முதல் தினமும் பூஸ்டர் டோஸாக Pfizer தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று (11) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)

இன்று (12) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...

PDF File: