ஒமிக்ரோன் (Omicron) கொவிட்-19 பிறழ்வு தொற்று பரவல் அச்சம் காரணமாக ஆபிரிக்க நாடுகள் சிலவற்றின் பயணிகளுக்கு இலங்கைக்குள் நுழையை விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
புதிய Omicron திரிபு அவதானம்; தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வர நள்ளிரவு முதல் தடை
அதற்கமைய, தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசத்தோ, நமீபியா, சிம்பாப்வே, சுவாசிலாந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படுவதாக, சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென இன்று (10) முற்பகல் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் விசேட குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அதற்கமைய, தற்போதுள்ள ஊக்குவிப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு சுற்றுலாத்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.