இராஜகிரிய விபத்து தொடர்பில் சம்பிக்கவுக்கு எதிரான குற்றப்பத்திரம் வாசிப்பு

இராஜகிரிய விபத்து தொடர்பில் சம்பிக்கவுக்கு எதிரான குற்றப்பத்திரம் வாசிப்பு-Charges Against Champika Read Our Before Colombo High Court

கடந்த 2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து தொடர்பான சாட்சியங்களை மறைத்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக உள்ளிட்ட இருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டுள்ளது.

இன்று (02) கொழும்பு மேல் நீதிமன்றில் இக்குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக அவரது சாரதி திலும் துசித குமார, வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு தொடர்பிலான குற்றப்பத்திரிகையே  கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று வாசிக்கப்பட்டது.