பல்கலைக்கு தெரிவானோரை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல்

பல்கலைக்கு தெரிவானோரை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல்-Registration of Students for University Entrance from Today

2020 க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்களை பதிவு செய்யும் செயற்பாடுகள் இன்று (26) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, இன்று (26) முதல் எதிர்வரும் டிசம்பர் 05ஆம் திகதி வரை பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்களை பதிவு செய்யும் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு அவர்கள் வழங்கியுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு SMS மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் பெறப்படும் தகவலுக்கமைய, மாணவர்கள் இன்று நண்பகல் 12 மணியின் பின்னர் பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தமக்கான பாடநெறிகளின் கீழ் பதிவுகளை மேற்கொள்ள முடியுமென பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.