அருட் தந்தை சிறில் காமினியிடம் சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு

அருட் தந்தை சிறில் காமினியிடம் சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு-3rd Day-4 Hour Statement-From Reverend-Father-Cyril-Gamini-Fernando

இன்று (22) முற்பகல் 9.30 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோ, பிற்பகல் 1.30 மணியளவில் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

அந்த வகையில் இன்றைய தினம் 3ஆவது நாளாக  CIDயில் முன்னிலையான அவர், சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்துத் தொடர்பில், கடந்த வாரம் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களாக வாக்குமூலம் வழங்கிய அவர், இன்று மூன்றாவது நாளாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

அந்த வகையில், கடந்த திங்கட்கிழமை 7 மணி நேரமும், செவ்வாய்க்கிழமை 9 மணி நேரமும் வாக்குமூலம் வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.