பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான 855 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரம் வாசிப்பு

பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான 855 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரம் வாசிப்பு-AG Reads Out Indictments Including 855 Charges-Against Former IGP Pujith Jayasundara

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் போதுமான புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்த போதிலும் அதனைத் தடுக்க தவறியமை தொடர்பில், முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான 855 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டுள்ளது.

இன்று (22) இந்த வழக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில், நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெந்திகே, மொஹமட் இர்ஷடீன் ஆகிய மூவரடங்கிய மேல் நீதிபதிகள் முன்னிலையில் சட்ட மாஅதிபரினால் குறித்த குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குறித்த வழக்கின் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கும் கடந்த ஒக்டோபர் 01ஆம் திகதி குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், இது தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று (23) ஆரம்பமாகியுள்ளன.