அனைத்து பாடசாலைகளும் ஆரம்பமாவதுடன் 'சிசு சரிய' பஸ் சேவைகளும் ஆரம்பம்

அனைத்து பாடசாலைகளும் ஆரம்பமாவதுடன் சிசு சரிய பஸ் சேவைகளும் ஆரம்பம்-1500 Sisu Seriya Buses From November 22

- சுமார் 1,500 பஸ்கள் சேவையில் 

கொவிட்-19 பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட பாடசாலைகள் கட்டம் கட்டமாக மீள ஆரம்பிக்கப்படும் திட்டத்திற்கு அமைய, எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை தரம் 6 - 9 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (22) முதல் அனைத்து 'சிசு சரிய' பஸ் சேவைகளையும் மீள ஆரம்பிக்குமாறு அனைத்து பிரிவிற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) தலைவர் சஷி வெல்கம தெரிவித்தார்.

தரம் 6 - 9 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதைத் தொடர்ந்து, சுமார் 1,500 'சிசு செரிய' பஸ்கள் சேவையில் இணைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சுகாதாரத் துறையின் வழிகாட்டல்களுக்கு இணங்க இந்த பஸ்கள் சேவையில் இணைக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டினார்.