ஒன்றுகூடலுக்கு முன் அனுமதி அவசியம்; அதி விசேட வர்த்தமானி

ஒன்றுகூடலுக்கு முன் அனுமதி அவசியம்-Quarantine Law-Have to Get Approval for People Gathering

- கொரோனா தொடர்பான புதிய கட்டுப்பாடுகள்

தனிநபர்கள் ஒன்றுகூடுதல், செயற்பாடுகள், கூட்டம் போன்றவற்றுக்கு முன் அனுமதி பெறுவது அவசியமென தெரிவித்து அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவுகளுக்கமைய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கொவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ள இடங்களில் ஒன்றுகூடல் தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சினால் நேற்று (11) புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்துக்கமைய, அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக புதிய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, முழு நாட்டுக்கும் அதிகாரம் பெற்றுள்ள உத்தியோகத்தர் ஒருவரால் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிக்காக பிறப்பிக்கப்படும் கட்டளைகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அனுமதி பெறாது ஒன்றுகூடல்கள், செயற்பாடுகள் , ஒன்றுகூடலுக்கான சந்தர்ப்பம் ஏற்படும் வகையிலான நிகழ்வுகள் என்வற்றை நடத்தக்கூடாதென அதிவிசேட வர்த்தமானியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏதேனுமொரு தரப்பினரால் இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மீறப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, குறித்த விதிமுறைகளை மீறும் வகையிலான செயற்பாடுகள் அல்லது நிகழ்வுகளுக்கு அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டாலும் அவற்றில் பொதுமக்கள் கலந்து கொள்ளக் கூடாதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

PDF File: