சம்பிக்க உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு இம்மாதம் 30இல்

சம்பிக்க உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு இம்மாதம் 30இல்-Case-Against-Champika-Ranawaka-November 30-2021

2016 ஆம் ஆண்டு இராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி எடுத்துக் கொள்ளபடவுள்ளது.

சம்பிக்க ரணவக மற்று அவரது சாரதியான துசித குமார, வெலிக்கடை பொலிஸ் முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக குறித்த வழக்கு சட்ட மாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி, வெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராஜகிரிய பகுதியில், WP KP 4575 எனும் ஜீப் வண்டியை பாதுகாப்பாற்ற முறையில் செலுத்தி விபத்தை ஏற்படுத்தி, இளைஞர் ஒருவரை காயப்படுத்தி விட்டு, தப்பிச் சென்றமை அது தொடர்பான சாட்சியங்களை மறைத்தமை, உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த வழக்கை நவம்பர் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.