பாதசாரி கடவைக்கு அருகில் விபத்து; ஒருவர் படுகாயம்

பாதசாரி கடவைக்கு அருகில் விபத்து; ஒருவர் படுகாயம்-Accident Near Road Crossing

கிளிநொச்சி ஏ9 வீதி தனியார் வங்கி முன்பாக  இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று (30) கிளிநொச்சி  ஏ9  வீதியில்  தனியார் வங்கி முன்பாக குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதசாரி கடவைக்கு அருகில் விபத்து; ஒருவர் படுகாயம்-Accident Near Road Crossing

விபத்தில் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியை சேர்ந்த 75 வயதான என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாதசாரி கடவையில் அண்மித்த முதியவர் ஏ9 வீதியை கடக்க முற்பட்டபோது டிப்பர் வாகனம் குறித்த முதியவரை மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

பாதசாரி கடவைக்கு அருகில் விபத்து; ஒருவர் படுகாயம்-Accident Near Road Crossing

குறித்த விபத்தில் குறித்த முதியவரின் கால் துண்டாடப்பட்டுள்ளதுடன், தலைப்பகுதியிலும் பாரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி குறூப் நிருபர்