காத்தான்குடியில் வாகன விபத்து: 20 வயது இளைஞன் பலி; மற்றுமொருவர் படுகாயம்

காத்தான்குடியில் வாகன விபத்து: 20 வயது இளைஞன் பலி; மற்றுமொருவர் படுகாயம்-Kattankudy Accident-20-Year Old Diead-One More Youth Injured

- காரில் வந்த வைத்தியர் ஒருவர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி பிரதான வீதியில் இன்று (28) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமோரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்

காத்தான்குடி பிரதான வீதி குட்வின் சந்தியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடியில் வாகன விபத்து: 20 வயது இளைஞன் பலி; மற்றுமொருவர் படுகாயம்-Kattankudy Accident-20-Year Old Diead-One More Youth Injured

களுவாஞ்சிக்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று முன்னே சென்ற மோட்டார் சைக்கிளை மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்களில் காத்தான்குடி மெத்தை பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஏ. அம்ஹர் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடியில் வாகன விபத்து: 20 வயது இளைஞன் பலி; மற்றுமொருவர் படுகாயம்-Kattankudy Accident-20-Year Old Diead-One More Youth Injured

குறித்த காரை செலுத்தி வந்தவர் பத்தரமுல்லையைச் சேர்ந்த ஒரு வைத்தியர் எனவும் இவர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் வைத்தியராக கடமையாற்றுவதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

சம்பவ இடத்துக்குச் சென்ற காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.பி. தென்னகோன் தலைமையிலான பொலிசார் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த காரின் சாரதியான வைத்தியரை கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்