எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானமில்லை

உதய கம்மன்பில மீண்டும் வலியுறுத்து

எரிபொருட்களின் விலையை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இது வரையில் எடுக்கப்படவில்லையென துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டம் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.