இலங்கையில் மாகாணங்கள் இடையேயான பயணக்கட்டுப்பாடு ஒக். 31 நீக்கம்

இலங்கையில் மாகாணங்கள் இடையேயான பயணக்கட்டுப்பாடு ஒக். 31 நீக்கம்-Inter Provincial Travel Restrictions Will be Removed on October 31 4am

தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 31, அதிகாலை 4.00 மணிக்கு நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் நாட்டில் அமுலில் இருந்த கொவிட்-19 தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் 01ஆம் திகதி நீக்கப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையே அமுலில் இருந்து வந்த உள்ள பயணக் கட்டுப்பாடுகள் நேற்று, ஒக்டோபர் 21 வரை நீடிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை ஒக்டோபர் 31 வரை நீடிக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார்.

தற்போது நாட்டின் நிலைமையை அவதானித்து குறித்த பயணக்கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 31, அதிகாலை 4.00 மணிக்கு நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.