கொழும்பு 09, 10, 11, 12, 13 பகுதிகளில் 13 மணி நேர நீர் வெட்டு

கொழும்பு 09, 10, 11, 12, 13 பகுதிகளில் 13 மணி நேர நீர் வெட்டு-13 Hour Water Cut in Several Places in Colombo

இன்று (16) இரவு 8.00 மணி முதல் நாளை முற்பகல் 9.00 மணி வரையான 13 மணித்தியாலங்களுக்கு கொழும்பின் (கொழும்பு 09, 10, 11, 12, 13) சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 09 (தெமட்டகொடை), கொழும்பு 10 (மருதானை, பஞ்சிகாவத்தை, மாளிகாவத்தை) கொழும்பு 11 (புறக்கோட்டை), கொழும்பு 12 (புதுக்கடை), கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை) ஆகிய பிரதேங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை அறிவித்துள்ளது.