ஒக்டோபர் 16 - 31 வரை பின்பற்ற புதிய சுகாதார வழிகாட்டல்கள்

ஒக்டோபர் 16 - 31 வரை பின்பற்ற புதிய சுகாதார வழிகாட்டல்கள்-New Health Guidelines-Oct 16-31

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கடந்த ஒக்டோபர் 01ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (15) வரை கடைப்பிடிக்க வேண்டிய சுகதார வழிகாட்டல்கள் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தன.

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன், இன்று (15) வரை மிக இறுக்கமான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதில் சற்று தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நாளை (16) முதல் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. (இணைப்பை பார்க்கவும்)

அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் வருமாறு:

 • உணவகங்கள்: அமர்ந்து உண்ண அனுமதி; கொள்ளளவில் 30%; உச்சபட்சம் 50 பேர்
 • திருமண நிகழ்வு - மண்டப கொள்ளளவில் 25%, உச்சபட்சம் 50 பேர்; திறந்த வெளி திருமணங்களில் உச்சபட்சம் 75 பேர்
 • இறுதிச் சடங்கு: ஒரே நேரத்தில் 20 நபர்கள் (24 மணித்தியாலத்திற்குள் கிரியைகள்)
 • இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அத்தியாவசியமற்ற பயணங்கள் அனுமதிக்கப்படாது
 • திரையரங்குகள் - 25% கொள்ளளவில் ஒக். 21 முதல் திறக்க அனுமதி
 • உடற்பயிற்சி நிலையங்கள் - ஒரு தடவையில் உச்சபட்சம் 10 நபர்கள்; கொள்ளளவில் 30% அனுமதி
 • பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்கள் - ஒரே நேரத்தில் கொள்ளளவில் 20% அனுமதி

ஏற்கனவே நடைமுறையில் இருந்தவை

 • மதவழிபாட்டுத் தலங்கள் - ஒன்றுகூட அனுமதியில்லை
 • வீடுகளிலிருந்து வெளியேறுதல் - தொழிலுக்காக, சுகாதார தேவை, அத்தியாவசிய கொள்வனவுக்கு மாத்திரம்
 • வைபவங்கள்/ஒன்றுகூடல்கள் - அனுமதி இல்லை
 • பிரத்தியேக வகுப்புகள் - அனுமதி இல்லை
 • சிகை அலங்காரம் - நேரத்தை ஒதுக்கி சேவை
 • பகல் நேர சிறுவர் பராமரிப்பு - அனுமதி
 • பஸ்கள்: ஆசன எண்ணிக்கையின் அடிப்படையில் பயணிகள் (A/C அனுமதிக்கப்படவில்லை)
 • விவசாய நடவடிக்கைகள் - அனுமதி
 • பாடசாலைகள் - 200 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறக்க சந்தர்ப்பம்
 • பாலர் பாடசாலைகள் - வருகை தரும் மாணவர்களில் 50% அனுமதி
 • பல்கலைக்கழகங்கள் - இறுக்கமான வழிகாட்டல்களுடன் ஆரம்பிக்க முடியும்