தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு -Army Handed Over Medical Equipment to Tellippalai Base Hospital

யாழ்‌. பாதுகாப்புப்‌ படைகளின்‌ கட்டளைத்‌ தலைமையகமானது, 4ஆவது வைத்தியப்‌ படையணியின்‌ கட்டளை அதிகாரி மேஜர்‌ சிந்தன குமாரவினால்‌ தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு Oxygen Concentrator உபகரணம் கையளிக்கப்பட்டுள்ளது.

COVID-19 தொற்றுநோயினால்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு, அமெரிக்க இலங்கை நிறுவனத்தினூடாக இலங்கை இராணுவத்தினரிடம்‌ கையளிக்கப்பட்டுள்ள அதிதீவீர சிகிச்சைப்‌ பிரிவில்‌ பயன்படுத்தப்படுத்தக்கூடிய குறித்த Oxygen Concentrator இயந்திரமானது இலங்கை இராணுவத்தினரிடம் வழங்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த உபகரணம், வைத்தியர்‌ பீ. திலீபனிடம்‌ உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அன்பளிப்பு செய்யும் நிழ்வானது, பாதுகாப்புப்‌ படைகளின்‌ கட்டளைத்தளபதி, யாழ்ப்பாணம்‌ மற்றும்‌ கொவிட்‌-19 கட்டுப்பாட்டு செயலணியின்‌ இணைப்பாளருமான மேஜர்‌ ஜெனரல்‌ ஜகத்‌ கொடித்துவக்குவின் ஆலோசனைக்கும்‌ வழிகாட்டலுக்கும்‌ அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள்‌ மற்றும்‌ தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின்‌ வைத்திய அதிகாரிகளும்‌ கலந்துகொண்டிருந்தனர்‌.