உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 24 பிரதிவாதிகளுக்கும் குற்றப்பத்திரம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 24 பிரதிவாதிகளுக்கும் குற்றப்பத்திரம்-Colombo High Court Trial-at-Bar-Serves Charges on 24 Accused

2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள 24 பிரதிவாதிகளுக்கு எதிராக, மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

3 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர்கள் இன்றையதினம் (04) இவ்வாறு குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கும் கடந்த ஒக்டோபர் 01ஆம் திகதி குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், இது தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.