நாடு திரும்பிய ஜனாதிபதி; பேத்தியை சந்தித்த மகிழ்ச்சியை வெளியிட்டார்

நாடு திரும்பிய ஜனாதிபதி; பேத்தியை சந்தித்த மகிழ்ச்சியை வெளியிட்டார்-Gotabaya Rajapaksa Arrived in Sri Lanka-After UNGA Visit

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது அமர்வில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) நாடு திரும்பினார்.

மு.ப. 8.55 மணிக்கு, எமிரேட்ஸ் விமான சேவைக்குக் சொந்தமான EK 650 விமானத்தில் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்.

இதேவேளை, தான் அமெரிக்கா சென்றபோது, தனது பேத்தியை முதன்முறையாகப் பார்த்த மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ சமூகவலைத்தளத்தில் தனது பேத்தியுடனான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகன் மனோஜ்  மற்றும் மருமகள் செவ்வந்தி ஆகியோர் பெற்றோர் ஸ்தானத்தை அடைந்தமைக்கு மீண்டும் தனது வாழ்த்துகளை ஜனாதிபதி அதில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட Facebook பதிவு வருமாறு,