ஒக்டோபர் 01 முதல் புதிய சுகாதார வழிகாட்டல்கள்

ஒக்டோபர் 01 முதல் புதிய சுகாதார வழிகாட்டல்கள்-New Health Guidelines-From-Oct-01-2021

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை (01) அதிகாலை 4.00 மணி முதல் நீக்கப்படுவதைத் தொடர்ந்து, கடைப்பிடிக்க வேண்டிய சுகதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகள், ஒக்டோபர் 15ஆம் திகதி வரை மிக இறுக்கமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வழிகாட்டல்களின் (இணைப்பை பார்க்கவும்) குறிப்பிட்ட சில விடயங்கள் வருமாறு:

 • வீடுகளிலிருந்து வெளியேறுதல் - தொழிலுக்காக, சுகாதார தேவை, அத்தியாவசிய கொள்வனவுக்கு மாத்திரம்
 • மதவழிபாட்டுத் தலங்கள் - ஒன்றுகூட அனுமதியில்லை
 • வைபவங்கள்/ஒன்றுகூடல்கள் - அனுமதி இல்லை
 • பிரத்தியேக வகுப்புகள் - அனுமதி இல்லை
 • உணவகங்கள் (சாப்பிடுதல்) ஒக்டோபர் 15 வரை அனுமதி இல்லை
 • சிகை அலங்காரம் - ஒரே நேரத்தில் 2 வாடிக்கையாளர்கள்
 • பகல் நேர சிறுவர் பராமரிப்பு - அனுமதி
 • திருமண நிகழ்வு - ஒக்டோபர் 15 வரை 10 பேர்; ஒக்டோபர் 15 இற்கு பின் மண்டபத்தின் கொள்ளளவில் 25%, உச்சபட்சம் 50 பேர்
 • இறுதிச் சடங்கு: ஒக்டோபர் 15 வரை ஒரே நேரத்தில் 10 நபர்கள்; ஒக்டோபர் 15 இற்கு பின்:  ஒரே நேரத்தில் 15 நபர்கள் (24 மணித்தியாலத்திற்குள் கிரியைகள்)
 • பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்கள் - ஒக்டோபர் 15 வரை: ஒரே நேரத்தில் கொள்ளளவில் 10% அனுமதி; ஒக்டோபர் 15 இற்கு பின்: 20% அனுமதி
 • இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அத்தியாவசியமற்ற பயணத்திற்கு அனுமதிக்கப்படாது
 • பஸ்கள்: ஆசன எண்ணிக்கையின் அடிப்படையில் பயணிகள் (A/C அனுமதிக்கப்படவில்லை)
 • விவசாய நடவடிக்கைகள் - அனுமதி
 • பாடசாலைகள் - 200 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறக்க சந்தர்ப்பம்
 • பாலர் பாடசாலைகள் - வருகை தரும் மாணவர்களில் 50% அனுமதி
 • பல்கலைக்கழகங்கள் - இறுக்கமான வழிகாட்டல்களுடன் ஆரம்பிக்க முடியும்
 • திரையரங்குகள் - அனுமதியில்லை
 • உடற்பயிற்சி நிலையங்கள் - ஒக்டோபர் 15 வரை: ஒரு தடவையில் 5 நபர்கள்; ஒக்டோபர் 15 இற்கு பின்: 30% அனுமதி