Thursday, September 30, 2021 - 2:26pm
- விரைவில் வர்த்தமானி
வர்த்தகர்களுக்கு வெள்ளைச் சீனி இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள அனுமதிப்பத்திர முறையை நீக்கி, குறித்த அனுமதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சீனிக்கு நிலவும் தட்டுப்பாட்டை நீக்கவும், அதன் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தவும் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய இது தொடர்பான அதி விசேட வர்த்தமானியை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.