இலங்கையின் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு அமைய, சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட பிரிவினருக்கு 3ஆவது டோஸ் தடுப்பூசியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய,
- 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்
- 30 - 60 வயது நோய் வாய்ப்பட்ட மற்றும் பல்வேறு சிக்கல்களைக் கொண்டவர்கள்
- புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயாளிகள்
- நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்
- சுகாதார சேவைகள் மற்றும் முன்னிலை பணிக்குழாம் ஊழியர்களுக்கு
3ஆவது டோஸாக Pfizer தடுப்பூசியை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இன்று (29) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இவர்களில் பெரும்பாலானோருக்கு Sinopharm தடுப்பூசி வழங்கப்பட்ட போதிலும், பூஸ்டர் தடுப்பூசியாக உலகளாவிய ரீதியில் 3ஆவது டோஸாக Pfizer தடுப்பூசி வழங்கப்படுவதனால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.