புத்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி

சுகாதார தரப்பிடம் IGP கோரிக்கை

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் புத்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு சுகாதார பணிப்பாளர் நாயகத்திடம் பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்கிரமரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் செயலாளரினால் எழுதப்பட்ட கோரிக்கையை அடுத்தே பொலிஸ் மாஅதிபர் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

கொவிட்-19 நிலைமைகள் காரணமாக புத்தக நிலையங்கள் நீண்டகாலமாக மூடப்பட்டுள்ளமையினால் புத்தக வெளியீட்டுத் தொழில் மிகவும் நெருக்கடியிலுள்ளது.

அத்துடன் புத்த நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையினால் பாடசாலை மாணவர்களின் கல்வியும் மோசமாக பாதிப்படைந்துள்ளதாகவும் இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் இத்தகைய கோரிக்கையை கருத்திற் கொண்டு, பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலத்திலும் புத்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொலிஸ் மாஅதிபர் சுகாதார பணிப்பளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.