நெல் சந்தைப்படுத்தல் சபை தலைவர் இராஜினாமா

நெல் சந்தைப்படுத்தல் சபை தலைவர் இராஜினாமா-Paddy Marketing Board Chairman Resigned

- தற்போதைய நிலையில் பணியை தொடர முடியாது என தெரிவிப்பு
- 20 வருடம் சபையில் பணியாற்றியவர்
- தனது சம்பளத்தில் ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கினார்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கலாநிதி ஜடால் மான்னப்பெரும தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட கலாநிதி ஜடால் மான்னப்பெரும, நெல் சந்தைப்படுத்தல் சபையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.

தற்போதைய நிலைமையில் தனது பணியைத் தொடர்வது கடினமெனத் தெரிவித்துள்ள அவர், நேற்று (14) தனது இராஜினாமா கடிதத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு அனுப்பியதாக தெரிவித்தார்.

இராஜினாமா செய்த ஜடால் மான்னப்பெரும, தனது சம்பளத்தில் இருந்து நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்திருந்ததாக, நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஐக்கிய ஊழியர் நலன் சங்கத்தின் தலைவர் பசன் மலிந்த பீரிஸ் தெரிவித்தார்.