மறு அறிவித்தல்வரை சில பரீட்சைகள் ஒத்திவைப்பு

ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2020 மற்றும் 2021 ஆசிரியர் கலாசாலைகளின் இறுதியாண்டு பரீட்சைகளே மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ.பூஜித தெரிவித்துள்ளார். 

ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சையை எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...