- உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி தீர்மானம்
இறக்குமதி செய்யப்படும் ஒரு கி.கி. பெரிய வெங்காயத்திற்கான விசேட பொருட்கள் வரி ரூ. 0.25 இலிருந்து ரூ. 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல், அதவாது இன்று (07) முதல் அமுலாகும் வகையில் பெரிய வெங்காயத்திற்கு ரூபா 40 வரி அதிகரிப்பு அமுல்படுத்தப்படுவதாக, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவையில் நிதியமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இன்று (07) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.
நாட்டின் பெரிய வெங்காயத்தின் தேவைக்காக வருடாந்தம் 290,000 மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, எதிர்வரும் 2 மாதங்களுக்கு 60,000 மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் சந்தைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவித்த அவர், தற்போது உள்நாட்டில் பெரிய வெங்காய அறுவடை ஆரம்பமாகியுள்ளதால், வெங்காய இறக்குமதியை மேற்கொள்வது உள்நாட்டு விவசாயிகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதற்கமைய, விவசாயிகளின் நலன் கருதி இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரியை ரூபா 40ஆக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
எனவே, பெரிய வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு எதிர்வரும் 2 மாதங்களுக்கு அவர்களது உற்பத்திக்கான சிறந்த விலை கிடைக்குமென அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் பெரிய வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் தொடர்பில், விதிக்கப்பட்ட விசேட பொருட்கள் வரி தொடர்பான வர்த்தமானிகள்
Add new comment