ஹிஷாலினி வழக்கில் கைதான ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனாரின் பிணை மறுப்பு

ஹிஷாலினி வழக்கில் கைதான ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனாரின் பிணை மறுப்பு-Rishad Bathiyudeen's Wife-Father In Law-Bail Application Rejected

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில், தீக்காயங்களுடன் மரணமடைந்த 16 வயதுச் சிறுமி, டயகம ஹிஷாலினி ஜூட்குமார் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மனைவியின் தந்தையின் பிணை மனுக்கள் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

குறித்த பிணை மனு இன்று (30) கொழும்பு மேலதிக நீதவான் ராஜிந்த ஜயசூரிய முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதவான் அவர்களது பிணை கோரிக்கையை நிராகரித்தார்.

இதற்கு முன் இரண்டு முறை இவ்வாறு பிணை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ரிஷாட் பதியூதீன் எம்.பியின் மனைவி, மனைவியின் தந்தை, தரகர் உள்ளிட்டோருக்கு எதிர்வரும் செப்டெம்பர் 06 ஆம் திகதி கடந்த வழக்கு தினத்தில் (23) மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...