இலங்கைக்கு வரும் அனைவருக்கும் PCR

புதிய விதிமுறைகள் வெளியீடு

 இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் நடைமுறை மீண்டும் திருத்தப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட தனிநபர்கள் உட்பட அனைத்து வருகையாளர்களும் நாட்டை வந்தடைந்தவுடன் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.  கொவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்ட அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே பெற்ற நபர்கள், பரிசோதனையில் வைரஸ் தொற்றுக்கு எதிர்மறையான முடிவினை வெளிப்படுத்தினாலும், 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் எதிர்மறையான முடிவினை வெளிப்படுத்தினால் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டிய அவசியம் இல்லை.

 


Add new comment

Or log in with...